Search

Arya to produce for his brother

arya

தமிழ் சினிமா நடிகர்கள் தற்போது தயாரிப்பாளர்களாகவும் மாறி வருகிறார்கள். தனுஷ், விஷால் ஆகியோர் வரிசையில் தற்போது ஆர்யாவும் சேர்ந்திருக்கிறார். ‘தி ஷோ பீப்பிள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மூலம் ‘படித்துறை’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘அமர காவியம்’ என்ற புதிய படத்தை தயாரிக்கவிருக்கிறாராம். இப்படத்தில் அவருடைய தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கிறார்.

சத்யா ‘புத்தகம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானாவர். தற்போது ‘காதல் டு கல்யாணம்’, எட்டுத் திக்கும் மதயானை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘அமர காவியம்’ படத்தை ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா ஷங்கர் இயக்குகிறார். ஒளிப்பதிவையும் இவரே கவனிக்கிறார்.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். பிற நடிகர், நடிகைகள் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படம் குறித்த பிற தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.