Search

Arrest Order to Kochaidaiyaan Producers

kochaidaiyaan

ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. படத்தை தயாரிப்பதற்காக இந்த நிறுவனம் ஆட் பீரோ அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கியது.

லாபத்தில் 20 சதவீதம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு ரூ.10 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்த கடனை திருப்பி செலுத்தும் வகையில் மீடியா ஒன் நிறுவனம் சார்பில் ரூ.3 கோடிக்கு காசோலை வழங்கப்பட்டது. ஆனால் பாங்கியில் பணம் இல்லாததாக காசோலை திரும்பியது.

இதையடுத்து மீடியா ஒன் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது சென்னை பெருநகர 13–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மீடியா ஒன் நிறுவன இயக்குனர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

கோர்ட்டில் ஆஜராக இயலாதது குறித்து அவர்கள் தரப்பில் கோர்ட்டில் காரணம் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த மாஜிஸ்திரேட்டு கோபிநாதன், வழக்கு விசாரணையின் போது தொடர்ந்து ஆஜராகாமல் இருந்த மீடியா ஒன் நிறுவன இயக்குனர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தார். வழக்கு விசாரணையை ஜனவரி 7–ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *