Search

All are Arnold Fans Says Surya

surya

ஐ’ பட விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டை தமிழ் திரையுலகினர் பலர் சந்தித்தனர்.

நடிகர் சூர்யா, ராஜா அண்ணாமலைபுரத்தில் அர்னால்டு தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு காலை 9 மணிக்கு சென்று சந்தித்தார். அப்போது ஜிம்மில் அர்னால்டு உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். அர்னால்டை சந்தித்தது குறித்து சூர்யாவே சொல்கிறார்.

நட்சத்திர ஓட்டலில் உடற்பயிற்சி கூடத்தில் அர்னால்டை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. என் முன்னால் அவர் நின்று கொண்டிருந்ததை நம்பவே முடியவில்லை. நான் மட்டுமின்றி எல்லோருமே அர்னால்டு ரசிகர்கள்தான். அவரை பார்த்து ‘வெல்கம் டு சென்னை’ என்றேன். சிரித்தபடி எனக்கு நன்றி சொன்னார்.

அர்னால்டுக்கு 67 வயது ஆகிறது. அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்தார். சில மணி நேரங்களிலேயே ஜிம்முக்கு போய் விட்டார்.

என் உடல் எடை பயிற்சி, பாடி பில்டிங் எல்லாவற்றுக்கும் அர்னால்டுதான் உந்துதலாக இருக்கிறார். அவரிடம் ஆட்டோ கிராப் வாங்கினேன்.

இவ்வாறு சூர்யா கூறினார்.

அர்னால்டு 15 வயதில் உடற்பயிற்சி செய்ய துவங்கினார். 20 வயதில் மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார். பாடி பில்டிங் பற்றி நிறைய புத்தகங்களும் எழுதி உள்ளார்.

சென்னையில் காலை 5.30 மணிக்கு இட்லி தோசை சாப்பிட்ட அவர் சிறிது நேரம் ஓய்வுக்கு பின் ஜிம்முக்கு சென்றார். அங்கு 6 மணி நேரம் உடற்பயிற்சி செய்தாக ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.