Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Arangetram Puthuyugam TV Serial Press Release

arangetram-puthuyugam-mega-serial-stills-1

“Arangetram”
(Monday to Friday at 8 .00 pm)

The young and beautiful Vijayalakshmi who works in a well known Software company lives a free and happy life. Things seemed to get even better when she gets married to the man of her dreams. Just as she is about to begin her new life, something she never imagined happens. Her life goes upside down when she is sexually assaulted by four unknown men. She is left torn physically and emotionally.
In a society that blames the victim rather than the culprits, she is left without help. To bring the culprits to justice, to prove she has done nothing wrong to go through hell on earth, she takes things in her own hands. Vijayalakshmi turns a new leaf as a bold warrior, fighting for justice and making sure that no other woman has to go through this.
How did her husband handle the consequences? Did her new family support Vijayalakshmi in her endeavor? Watch as the story unveils.
Titled “Arangetram”, with acclaimed director Suresh Krissna behind the camera, the title song has Lyrics by Pa.Vijay with music from ‘Thenisai Thendral’ Deva. Actress Sivaranjani is set to play the role of Vijayalakshmi with Actor Shyam essaying the role of her husband. “Arangetram” will begin airing in Puthuyugam from 26th May and is slotted for telecast Monday to Friday at 8 .00 pm.

இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவின், ‘அரங்கேற்றம்’
– புதுயுகத்தில் சமூகப் புரட்சித் தொடர்
(திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.00 மணிக்கு)
டெல்லி மாணவிக்கு ஓடும் பஸ்ஸில் நடந்த பாலியல் வன்முறைக் கொடுமையை யாரும் மறந்திருக்க முடியாது. நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் வேதனை வடு மறைவதற்குள், சென்னையைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவரும் கயவர்களின் கொடுமைக்குப் பலியானார். இதுபோன்ற கொடூரங்கள் நடக்கும் போதெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. அதனால் பெரும்பாலான சம்பவங்கள் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்படுகின்றன. இந்த பாலியல் வன்முறை சம்பவத்தின் அடிப்படையாகக் கொண்டு, ‘அரங்கேற்றம்’ மெகா தொடரை வழங்குகிறார் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா.
காண்பவரை சுண்டியிழுக்கும் அழகியான விஜயலட்சுமி ஒரு பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணி புரிகிறார். இளமைத் துள்ளலுடன் சுதந்திரப் பறவையாக சுற்றித் திரிந்த விஜயலட்சுமிக்குத் திருமணம் நடக்கிறது. இல்லற வாழ்வில் நுழையும் ஆனந்தக் கனவுகளுடன் இருந்த விஜயலட்சுமியை, திடீரென நான்கு ஆண் மிருகங்கள் கடித்துக் குதறுகின்றன. பாலியல் வன்முறைக்கு ஆளான அவலத்தில் கூனிக்குறுகிப் போகிறார் விஜயலட்சுமி.
பாதிக்கப்பட்டவளையே குற்றவாளியாகப் பார்க்கும் சமூகத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். நடந்த சம்பவத்திற்கு தான் எந்த வகையிலும் பொறுப்பு இல்லை என்பதையும் இந்த சம்பவத்திற்கு அவமானப்படவேண்டியது இந்த சமூகம்தான்தான் என்று உணர்கிறார். தன் மீது சுமத்தப்படும் விமர்சனங்களை எதிர்த்து, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக கொதித்து எழுகிறாள் விஜயலட்சுமி. தன்னை இழிநிலைக்கு ஆளாக்கிய கயவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கவும், இனி எந்தப் பெண்ணுக்கும் அநீதி நிகழக்கூடாது எனவும் அறப்போராட்டத்தைத் தொடங்குகிறாள்.
இவளது ஆவேசப் போராட்டத்திற்கு குடும்பம் ஆதரவாக இருந்ததா, கைகொடுக்க வேண்டிய கணவனின் நிலை எப்படியிருந்தது என்பதை இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவின் கைவண்ணத்தில் வெளிவரும், ‘அரங்கேற்றம்’ தொடரில் காணலாம். இந்தத் தொடரில் விஜயலட்சுமியாக சிவரஞ்சனி, அவரது கணவராக ஷாம் நடிக்கிறார்கள். பா.விஜய் பாடல் எழுத ‘தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைக்கிறார். புதுயுகம் தொலைக்காட்சியில் மே 26-ம் தேதி தொடங்கும் ’அரங்கேற்றம்’ தொடரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.00 மணிக்கு காணத் தவறாதீர்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *