Search

AR Rahman was Proud due to his 3 Generation Music

ar_rahman

சித்தார்த்-வேதிகா நடிப்பில் காவிய படமாக உருவாகியுள்ள புதிய படம் ‘காவியத்தலைவன்’. இப்படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று நடந்தது. இதையடுத்து, பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர் படக்குழுவினர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் சித்தார்த், நடிகைகள் வேதிகா, அனைகா, இயக்குனர் வசந்தபாலன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், எழுத்தாளர் ஜெயமோகன், பாடலாசிரியர் பா.விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் வசந்தபாலன் பேசும்போது, ‘அங்காடித்தெரு’ படம் முடிந்தபிறகு நானும் ஜெயமோகனும் நாடக வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, அவ்வை சண்முகி எழுதிய நாடக வாழ்க்கை என்ற புத்தகத்தை பற்றி ஜெயமோகன் என்னிடம் விளக்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது சாதாரணமாக கேட்டுக் கொண்டிருந்த நான், அதன்பிறகு அதன்மீது ஈடுபாடு ஏற்பட்டு, அப்புத்தகத்தை தேடிக் கண்டுபிடித்து படிக்க ஆரம்பித்தேன். அதுதான், இந்த படம் எடுக்க எனக்கு உந்துதலாக இருந்தது என்றார்.

ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, நான் இதுவரை 3 தலைமுறைகளுக்கு இசையமைத்திருக்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரானிய இயக்குனர் மஸித் மஸித்திடம் அமர்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, அவர் என்னிடம், நான் உங்களுடைய படங்கள் எல்லாம் பார்த்து வருகிறேன். ஏன் உங்கள் கலாச்சாரத்தை விட்டுவிட்டு, வெஸ்டர்ன் கலாச்சாரத்தையே பின்பற்றி வருகிறீர்கள் என்றார். அவருக்கு நான் இந்த படத்தை போட்டுக் காண்பிப்பேன். அவருக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றார்.

இவ்விழாவில், மேடை நாடக கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கி அவர்களை கௌரவித்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *