Search

AR Rahman at Kirami Award Function

ar-rahman

இசைத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் ‘கிராமி விருது’ ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 56-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலுள்ள ஸ்டேப்பில்ஸ் அரங்கில் இன்று நடைபெற்றது.

‘ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ள இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர். ரகுமான் இந்த கிராமி விருதினை ஏற்கனவே இரண்டு முறை பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற 56-வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் ‘மெட்ராஸின் மொஸார்ட்’ என்றழைக்கப்படும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

இவ்விழாவில் அவர் பங்கேற்ற புகைப்படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், அடிக்குறிப்பாக ‘கிராமி விழாவில் நான்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விழாவில் பங்கேற்ற ஏ.ஆர். ரகுமான் நீலநிற பேண்ட்-சட்டையில் எளிமையாக காட்சியளிப்பதை காணமுடிந்தது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *