Search

AR Rahman America Home Attacked by Unknown Persons

ar-rahman

அமெரிக்காவில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீட்டில் மர்ம மனிதர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

ஸ்லம் டாக் மில்லினர் படத்தில், ஆஸ்கார் விருது பெற்றதன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் உலகளவில் பிரபலமானார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், மொழி படங்களுக்கு இசையமைத்த இவர் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தற்போது மில்லியன் டாலர் ஆர்ம் என்ற ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீசாக உள்ளது.

ஹாலிவுட் பட வாய்ப்புகள் தொடர்ந்து வருவதால் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் வீடு வாங்கி இருக்கிறார். அமெரிக்கா செல்லும் போதெல்லாம் அந்த வீட்டில் தான் தங்குகிறார். இந்த வீடு மீதுதான் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் ஏ.ஆர்.ரகுமான் அதிர்ச்சியடைந்துள்ளார். தாக்கியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனது வீடு தாக்கப்பட்டதை டுவிட்டரில் புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார் ஏ.ஆர்.ரகுமான், வீட்டு சுவரில் கறுப்பு வண்ணத்தில் கிறுக்கப்பட்டும் இருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *