Search

AR Murugadoss Interested to Direct Ajith Film

Ajith

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவந்த கத்தி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் விஜய்-சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் தமிழ்நாடு மட்டுமில்லாது உலகின் பல்வேறு இடங்களிலும் திரையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. ஏற்கெனவே, விஜய்யுடன் இணைந்து ‘துப்பாக்கி’ என்ற சூப்பர் டூப்பர் படத்தை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது விஜய்க்கு மற்றொரு சூப்பர், டூப்பர் படத்தை கொடுத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது. இந்நிலையில், அஜீத் நடிக்கும் படத்தை இயக்க ஆசை உள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,

நான் உதவி இயக்குனராக இருந்தபோது எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் அஜீத். அவருடைய நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று எனக்கு நீண்டநாளாக ஆசை. அவருக்காக நான் கதை தயார் செய்து வைத்துள்ளேன். அவருடைய உத்தரவுக்காகத்தான் காத்திருக்கிறேன் என்று கூறினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் அஜீத்தை வைத்து ஏற்கெனவே ‘தீனா’ என்ற படத்தை எடுத்தார். இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார். இப்படம் பெரிய வெற்றி பெற்றது. அஜீத்தை முழு ஆக்ஷன் ஹீரோவாக உருவாக்கிய படம் இது என்று சொன்னால் அது மிகையாகாது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *