Search

Appukutty to become Modern Hero

15

 

 

‘குள்ளநரி கூட்டம்’ படத்தை இயக்கிய சி.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘எங்க காட்டுல மழை’. வெவ்வெறு எதிர்பார்ப்புகளோடு சென்னை வரும் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, டக்ளஸ் என்ற கோல்டன் ரிக் வகை நாய் ஒன்று அடிக்கும் லூட்டியை படம் முழுவதும் நகைச்சுவையாக எடுத்துள்ளனர்.

‘சென்னையில் ஒருநாள்’ படத்தில் நடித்த மிருதுன் கதாநாயகனாக நடிக்க, ஸ்ருதி ராமகிருஷ்ணன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மற்றும் அப்புக்குட்டி, மதுமிதா, அருள்தாஸ், சாம்ஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சூர்யா ஏ.ஆர் ஒளிப்பதிவு செய்ய, சி.விஜய் இசையமைக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் பேசும்போது, இந்த படத்தில் நாய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. படத்தில் நாயகர்கள் அடிக்கும் பஞ்ச் வசனத்துக்கு நாய் கொடுக்கும் கவுண்டர் டயலாக்குகள் வெகுவாக எல்லோரையும் ரசிக்க வைக்கும். ஏற்கெனவே ‘குள்ளநரி கூட்டம்’ படத்தை எடுத்து பல குடும்பங்களின் மனதில் இடம்பெற்றேன். தற்போது குழந்தைகளை கவர்வதற்காகவே இந்த படத்தில் நாயின் கதாபாத்திரத்தை இணைத்து எடுத்துள்ளேன்.

அப்புக்குட்டி இதுவரை நடித்த கதாபாத்திரத்திலிருந்து இதில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வருகிறார். மாடர்ன் இளைஞராக, வாயில் சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவராக வருகிறார். அவரது முடி அலங்காரம், உடையமைப்பு என எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறோம். படத்தில் 2 பாடல்கள் படமாக்கப்பட்ட நிலையில், இன்னும் 2 பாடல்கள் மிச்சமிருக்கிறது. இந்த பாடலை படமாக்குவதற்காக மலேசியா, சிங்கப்பூர் பயணப்பட இருக்கிறோம். செப்டம்பர் மாதம் படத்தை வெளியிடவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *