Search

Anushka’s Palace Queen Role

anushka

தெலுங்கில் ‘ருத்ரமாதேவி’ படத்துக்காக பிரமாண்ட அரண்மனை அரங்குகள் அமைத்து அனுஷ்கா நடிக்கும் காட்சிகளை படமாக்குகின்றனர். சரித்திர கதையம்சத்தில் இப்படம் தயாராகிறது.

‘ருத்ரமாதேவி’ மகாராணியின் வீர வரலாறு இதில் காட்சிபடுத்தப்படுகிறது. ருத்ரமா தேவி வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார் வாள் சண்டைகள், குதிரையேற்றம் பயிற்சிகள் பெற்று இதில் நடிக்கிறார். 3டியில் இப்படம் தயாராகிறது. இந்திய திரைப்பட வரலாற்றில் 3 டியில் தயாராகும் முதல் சரித்திர படம் இதுவாகும்.

இப்படத்துக்காக ஐதராபாத்தில் உள்ள ராமா நாயுடு கோபனபள்ளி ஸ்டூடியோவில் பிரமாண்ட அரண்மனை அரங்குகளை இயக்குனர் தோட்டா தரணி அமைத்துள்ளார். நீளமான ஏழு சுவர்களையும் எழுப்பியுள்ளார். இந்த அரங்குக்குள் வருகிற 29–ந்தேதியில் இருந்து பிப்ரவரி 20–ந்தேதிவரை போர்க்காட்சிகளை படமாக்குகின்றனர்.

ஆயிரக்கணக்கான துணை நடிகர், நடிகைகள் இதில் நடிக்கின்றனர். அவர்களும் சரித்திர கால ஆடை, ஆபரணங்கள் அணிந்து வருகிறார்கள். இப்படத்தில் அனுஷ்காவுடன் தெலுங்கு நடிகர் ராணா, பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், சுமன், கேத்ரினா, பிரபா, ஜெயபிரகாஷ் ரெட்டி, ஆதித்யாமேனன், பிரசாத் ஆதித்யா, அஜய், விஜய்குமார், வேணுயாதவ், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இளைய ராஜா இசையமைக்கிறார். தமிழிலும் இப்படம் வருகிறது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *