Search

Anushka refused to act as old teacher

Anushka

தமிழில் ரஜினியுடன் லிங்கா படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபலி படங்களில் நடிக்கிறார். இவற்றில் லிங்கா படமும் ருத்ரமாதேவி படமும் முடிவடைந்துள்ளது. தெலுங்கில் வேறு படங்களுக்கு ஒப்பந்தமாகவில்லை. அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும் அடுத்த வருடம் ஆரம்பத்தில் திருமணம் நடக்க உள்ளது என்றும் செய்திகள், வெளியாகியுள்ளன.

இந்தி, தெலுங்கில் தயாராகும் புதுப்படமொன்றில் ஆசிரியை வேடத்தில் நடிக்கும் படி அனுஷ்காவை அணுகி கால்சீட் கேட்டனர். கதை முழுவதையும் அனுஷ்கா கேட்டார். பிறகு அதில் நடிக்க மறுத்து விட்டார். ஆசிரியை வேடம் முழுக்க சேலை அணிந்து கொஞ்சம் வயதான கெட்டப்பில் இருப்பது போல் தோன்றியது. இதில் நடித்தால் அக்காள், அத்தை, அண்ணி கேரக்டர் சாயலில் இருக்கும் என்று கருதினார். எனவே நடிக்க மறுத்து விட்டார் என்கின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *