Search

Anushka in New Problem

anushka hot

தமிழ் நடிகர்களை அவமதித்ததாக அனுஷ்கா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் அளித்த பேட்டியே இந்த சர்ச்சைக்கு காரணம். உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு ஹிருத்திக்ரோஷன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான் என பதில் அளித்து இருந்தார்.

இந்த பதில் தமிழ், தெலுங்கு பட உலகினரை அதிர்ச்சியடைய வைத்தது. தெலுங்கு, தமிழில்தான் அவர் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஆர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தெலுங்கிலும் பெரிய கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து இருக்கிறார். இவர்களில் ஒருவரை கூட பிடித்த நடிகர்கள் என்று சொல்லாமல் இந்தி ஹீரோக்கள் பெயரை சொன்னது ரசிகர்களை கோப்பட வைத்துள்ளது. அனுஷ்காவுக்கு எதிராக பேஸ்புக், டுவிட்டர்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *