Search

Anushka is my Sister – Director Hari

hari

சூர்யா நடித்த சிங்கம் II திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியையொட்டி சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இப்படத்தின் டைரக்டர் ஹரி, சூர்யா, ரகுமான், நாசர், விஜயகுமார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் படத்தில் நடித்த பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சூர்யா பேசும்போது, ”இந்த வெற்றி நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வெற்றி. சரியான சமயத்தில் இந்த வெற்றி எனக்கு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ஹரி ஆவார். அவருடன் இது எனக்கு 4-வது படம். இந்தபடத்தை ‘ஜோ’ பார்த்துவிட்டு கைத்தட்டி பாராட்டினார். எனது தந்தை படத்தை பார்த்துவிட்டு உன்னை நினைத்தால் கவுரவமாக இருக்கிறது என ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது” என்றார்.

இயக்குனர் ஹரி பேசும்போது, ”சிங்கம் முதல் பாகத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு இரண்டாம் பாகத்திற்கும் இருந்தது. இதனால் மிகவும் கஷ்டப்பட்டு இப்படத்தை குழுவாக சேர்ந்து உருவாக்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. நான்கு படங்கள் சூர்யாவுடன் இணைந்து வேலை செய்துள்ளேன். இதனால் இவர் எனக்கு சகோதரர் போல் ஆகிவிட்டார்” என்றார்.

அதன்பின் பத்திரிகையாளர் கேள்வியின்போது, நான்கு படங்கள் சூர்யாவுடன் இணைந்து வேலை செய்யததால் சகோதரர் என்கிறீர்கள். அனுஷ்காவுடன் இணைந்து இரண்டு படங்கள் செய்திருக்கிறீர்கள். அவரை என்ன என்று சொல்வீர்கள் என்று கேட்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *