Search

Anushka Injured in Shooting Accident

anushka

அனுஷ்கா சண்டை காட்சியில் நடித்த போது காயம் அடைந்தார். தமிழ், தெலுங்கில் தயாராகும் ருத்ரமாதேவி, பாகுபலி படங்களில் அனுஷ்கா நடிக்கிறார். இரண்டும் சரித்திர கதையம்சம் உள்ள படங்கள் ஆகும். இப்படங்களில் அனுஷ்காவுக்கு எதிரிகளுடன் ஆக்ரோஷமாக மோதுவது போல் சண்டை காட்சிகள் உள்ளன.

இதற்காக வாள் சண்டை பயின்றார். குதிரையேற்றமும் கற்றார். படப்பிடிப்பில் அனுஷ்கா நடித்துக் கொண்டிருந்த போது வலது கையில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.

சண்டை காட்சியில் நடித்துக் கொண்டு இருந்தபோது இந்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து கையில் கட்டு போட்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *