Search

Anushka Enters Bollywood

b4e2abce-d9f1-4c68-af7a-153386f4fcaf_S_secvpf

தென்னிந்திய நடிகைகள் எல்லோருக்கும் பாலிவுட்டில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இன்று நேற்று அல்ல, நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஸ்ரீதேவி, ஹேமமாலினி, ஜெயப்பிரதா, அசின், தமன்னா, காஜல் அகர்வால், திரிஷா, டாப்சி என தென்னிந்திய நடிகைகள் பலரும் பாலிவுட்டில் நுழைந்து வெற்றிகளை குவித்துள்ளனர்.

இவர்கள் வரிசையில் தற்போது அனுஷ்காவும் இணைந்துள்ளார். பாலிவுட் இயக்குனர் ஈஸ்வர் நிவாஸ் இயக்கும் ‘ஜூவனில்’ என்ற புதிய படத்தில் இவர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஈஸ்வர் நிவாஸ் ஏற்கெனவே ‘சூல்’, ‘டோட்டல் சியாபா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கும் இந்த படம் உண்மை கதையை மையப்படுத்தி உருவாகவுள்ளது. இப்படத்தின் கதைக்கு அனுஷ்கா பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கதையை கூறியுள்ளார் இயக்குனர். கதையே கேட்ட அனுஷ்காவும் கதை பிடித்திருப்பதாக இயக்குனரிடம் கூறியுள்ளார். என்றாலும், இப்படத்தில் நடிக்க இன்னும் அவர் ஒப்பந்தமாகவில்லையாம். எல்லாம் நினைத்தபடி நடந்தால் வரும் ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *