Search

Anushka Atoning Prayer due to Jewelley Theft

Anushka

அனுஷ்கா ‘ருத்ரமாதேவி’ என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்கின்றனர். இதில் அனுஷ்கா ராணி கேரக்டரில் வருகிறார். இதற்காக குதிரையேற்றம், வாள் சண்டை போன்றவற்றை கற்று நடிக்கிறார்.

படத்தில் அனுஷ்கா அணிவதற்காக தங்கத்தில் பிரத்யேகமாக நகைகள் செய்யப்பட்டன.

இவற்றின் மதிப்பு பல கோடிகள் இருக்கும். இரண்டு பெட்டிகளில் அவற்றை படப்பிடிப்புக்கு தினமும் எடுத்து வந்தனர். அந்த நகைகளை அணிந்து கொண்டு அனுஷ்கா நடித்தார். படப்பிடிப்பு முடிந்ததும் மாலையில் அவற்றை பெட்டிக்குள் கழற்றி வைத்து விடுவர்.

அந்த நகை பெட்டிகளில் ஒன்று படப்பிடிப்பில் இருந்து திடீரென மாயமானது. யாரோ அதை திருடிச் சென்று விட்டனர். இதனால் அனுஷ்காவும், படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்தார்கள். போலீசில் புகார் செய்யப்பட்டது. நகைகளை திருடியவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைகள் மாயமானது குறித்து அனுஷ்கா தற்போது கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:–

ருத்ரமா தேவி என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம். அதில் ஒரிஜினல் தங்க நகைகளை அணிந்து நடித்தேன். நகை எதுவும் காணாமல் போய்விடக்கூடாது என்ற பதட்டம் எனக்குள் இருந்தது. அப்படி நான் பயந்த மாதிரியே சில தங்க நகைகள் மாயமாகிவிட்டது. இதனால் அச்சப்பட்டேன். சிலர் இதை அபசகுணம் என்றனர். ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயமும் ஏற்பட்டது.

இதனால் ஆந்திராவில் உள்ள ‘ருத்ரம்மா தேவி’ கோவிலை வேண்டி விரதம் இருந்தேன். அந்த கோவிலுக்கு சென்று பரிகார பூஜைகளும் செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *