Search

Anjali is upset due to emails

Anjali

தமிழ் சினிமாவே வேண்டாமென்று ஆந்திர கரையோரம் ஒதுங்கிய அஞ்சலி மீண்டும் கோடம்பாக்கத்தில் கோலோச்சத் தயாராகி விட்டார். தற்போது மதகஜராஜா படம் வெளியாவதால் இதுதான் சரியான தருணம் என்று கடந்த வாரத்தில் ஒரு என்ட்ரி கொடுத்தார். ஆனால் தனது என்ட்ரி சாதாரணமாக இருக்கக்கூடாது என்று சில அதிரடி செய்திகளோடு வந்திறங்கினார்.

அப்போது, நான் மதகஜராஜா படத்துக்கு டப்பிங் பேச ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று வெளியான செய்து தவறு என்று சொன்ன அஞ்சலி, நான் அரசியல்வாதியின் மருமகனுடன் ரகசிய திருமணம் செய்துவிட்டதாக வெளியான செய்தி அதைவிட தவறானது என்றும் மறுப்பு செய்தி கொடுத்தார். இதனால் இரண்டொரு நாட்களாக மீடியாக்களுக்கு மறுபடியும் தீனி போட்டார் அஞ்சலி.

அப்போது, தனது இ-மெயில் ஒன்றையும் வெளியிட்டு, இனி என்னைப்பற்றிய தவறான செய்திகள் வெளியானால் இந்த மெயிலில் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நான் உடனே விளக்கம் கொடுக்கிறேன் என்றும் அறிவித்தார். ஆனால், மீடியாவினர் தொடர்பு கொள்ள வெளியிட்ட அந்த மெயிலை இப்போது அஞ்சலியின் ரசிக கோடிகள் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்களாம்.

ஆளாளுக்கு தங்கள் மனதில் பதியம் போட்டு வைத்திருந்த அஞ்சலியின் அழகை வர்ணிக்கும் கவிதைகளாக மெயில் அனுப்ப, அதைப்பார்த்து அப்செட்டாகி விட்டாராம் அஞ்சலி. இதனால் இரண்டே நாட்களில் மொத்த இ-மெயில் பக்கங்களும் ஸ்தம்பித்து விட, இப்போது அந்த மெயிலை பயன்படுத்துவதா? வேண்டாமா? என்ற யோசனையில் இருக்கிறாராம் அஞ்சலி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *