தமிழ்த் திரையுலகில் வெளிநாட்டுக் கதைக்களங்களைக் தேர்வு செய்வது சமீபத்திய வழக்கமாகியுள்ளது. ஜார்ஜியா, ஜப்பான் போன்ற நாடுகளில் படப்பிடிப்பை நடத்திய இயக்குநர்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்தும் அந்த வரிசையில் தனது புதிய படத்தினை வெளிநாடுகளில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
இவரின் ‘அனேகன்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷும், நடிகை அமிராவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை தெற்காசிய நாடுகளில் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்தப் படத்தைப் பற்றி நாயகி அமிராவிடம் கேட்டபோது, “இயக்குனர் கே.வி. படத்தினை மியான்மர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தின் பாடல் காட்சிகளுக்கும் அருமையான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இதுவரை சிறிய பகுதியே படமாக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பாடல் காட்சிகள் வரும் மார்ச் மாதம்தான் படமாக்கப்பட உள்ளன” என்று தெரிவித்தார்.