அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நடிகர் தனுஷ் நடிகை அம்மரியா நடிக்கும் அரேகன் படபிடிப்பு நடந்து வருகிறது. வியாசர்பாடி ரெயில் நிலையத்தில் சம்பவம் நடப்பது போல அரக்கோணத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக 8–வது பிளாட்பாரத்தில் 3 இடங்களில் வியாசர்பாடி என்ற போர்டு வைக்கபட்டிருந்தது. படபிடிப்புபை பார்க்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரெயில் நிலையத்தில் திரண்டனர். தனுசை பார்த்து இளைஞர்கள் ஆரவாரமாக குரல் எழுப்பினர். சிலர் தனுசிடம் ஆட்டோகிராப் வாங்க முயன்றனர். அப்போது பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அரக்கோணம் டவுன் போலீசார் ரெயில் நிலைய போலீசார் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். அங்கு போலீஸ் உடையில் துணை நடிகர்கள் சுற்றி வந்தனர். இதனால் எது உண்யைமான போலீஸ் என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.