Search

Amalapaul and Kajal affected due to Tammanah Reentry

amala-paul-kajal-tamannah

கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக தமிழ்ப்படம் எதிலும் தென்படாத தமன்னா, அஜீத்துடன் இணைந்து நடித்து பொங்கலுக்கு வெளியான ‘வீரம்’ திரைப்படம் அவருக்கு நல்லதொரு வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் மறுபடியும் பிசியாகி உள்ள அவர் தனது சம்பளத்தையும் இரட்டிப்பாக்கியுள்ளதாகவும், ஒரு படத்திற்கு 1.5 கோடி தற்போது குறிப்பிடுவதாகவும் திரைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த செய்தி நடிகர் விஜய்யின் சமீபத்திய படங்களில் நடித்தன் மூலம் முன்னணி இடத்திற்கு வரமுடியும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அமலாபால், காஜல் அகர்வால் போன்றோரின் எதிர்பார்ப்புகளை பாதித்துள்ளது. நடிகர் விஜய்யுடன் நடித்து வெளிவந்த ‘தலைவா’ வெற்றியின் மூலம், தான் தமிழ்த் திரையுலகில் ஒரு சுற்று வரமுடியும் என்று எண்ணிய அமலாபாலுக்கு அந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியைத் தழுவியதை ஜீரணிக்க முடியவில்லை.

தற்போது ஜெயம் ரவியுடன் சமுத்திரக்கனி இயக்கும் ‘நிமிர்ந்து நில்’, தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி’ போன்ற படங்கள் அவர் கைவசம் இருந்தாலும் மேனன் இயக்கத்தில் அஜீத்துடன் இணையும் வாய்ப்பு ‘தலைவா’ தோல்வியினால் கைநழுவி விட்டது.

காஜல் அகர்வால் விஜய்யுடன் நடித்து வெளிவந்துள்ள ‘ஜில்லா’ வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை அவருக்குப் புதிய வாய்ப்புகள் எதுவும் கிட்டவில்லையாம்.

நடிகர் அஜீத்தின் ‘வீரம்’ படத்தின் வெற்றியினால் தமன்னா காட்டில்தான் மழை என்று கூறப்படுகின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *