இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினராக இருந்தார். பின்னர் அவர் காங்கிரசில் இருந்து விலகினார்.
தற்போது குஜராத் அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கான தூதராக உள்ளார்.
குஜராத் முதல்–மந்திரியான நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவி ஏற்க இருப்பதற்கு அமிதாப் பச்சன் மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யாராய் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
மும்பையில் நடந்த டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யாராய் மோடியை வெகுவாக புகழ்ந்தார். அவர் கூறியதாவது:–
மோடி தலைமையில் இந்தியா பிரகாசமாக ஒளிரும் என நம்புகிறேன். அனைத்து தரப்பினரையும் அரவணைத்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வேன் என்று மோடி தனது பிரசாரத்தில் கூறினார்.
இந்திய நாட்டு பிரஜை என்ற அடிப்படையில் அவருடன் சேர்ந்து பயணம் செய்ய விரும்புகிறேன். மோடி மென்மேலும் வெற்றி அடைய கடவுள் அவரை ஆசீர்வதிக்க வேண்டும்.
இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.