திருப்பதி கோவிலில் நடிகைகள் சினேகா, தீபிகா படுகோனே, ஜுகி சாவ்லா ஆகியோர் நேற்று சாமி தரிசனம் செய்தனர். காலையில் நடந்த சுப்ரபாத சேவையின்போது நடிகை சினேகா, ஜுகிசாவ்லா ஆகியோர் தனித்தனியாக தரிசனம் செய்தனர்.
நைவேத்திய இடைவெளியின் போது நடிகை தீபிகா படுகோனே சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ஆலய நிர்வாகிகள் தரிசனத்துக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினார்கள்.
வெளியே வந்த அவர்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது. நடிகைகளுடன் கைகுலுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகை ஜுகி சாவ்லா கூறியதாவது:– திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தவுடன் ஒரு சக்தி கிடைத்ததாக உணர்ந்தேன். சொல்ல முடியாத அளவுக்கு திருப்தி கிடைத்தது. அதனால்தான் கோடான கோடி பேர் ஏழுமலையான் கோவிலுக்கு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.