Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Actress Shruthi hassan Purchased new Home in mumbai

S

 

 

இந்திப் படங்களில் பிசியாக நடித்ததால் ஒரு வருடத்துக்கு முன் மும்பை பந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார் சுருதிஹாசன். அங்கிருந்துதான் ராமையா வஸ்தாவையா, டிடே படங்களின் படப்பிடிப்புக்கு சென்று வந்தார். தற்போது வெல்கம் பேக் என்ற இந்தி படத்திலும் நடத்தி வருகிறார்.

வாடகை வீட்டில் தங்கி இருந்த போது கடந்த வருடம் நவம்பர் மாதம் சுருதிஹாசன் மீது தாக்குதல் நடந்தது. மர்ம மனிதன் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து சுருதிஹாசனை தாக்கினான். சுருதி கதவை வேகமாக சாத்தி தள்ளிவிட்டு அவனிடம் இருந்து தப்பினார். பிறகு போலீசார் தாக்கியவனை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சில நாட்கள் தோழி வீட்டில் தங்கி இருந்தார். பிறகு வாடகை வீட்டுக்கே திரும்பி சென்றார். குடும்பத்தினரும் நண்பர்களும் வாடகை வீடு பாதுகாப்பாக இல்லை என்றும் அங்கிருந்து காலி செய்து விடும்படியும் வற்புறுத்தினர்.

இதையடுத்து சொந்தமாக வீடு வாங்க புரோக்கர் மூலம் தேடி வந்தார். மும்பை அந்தேரி பகுதியில் இரண்டு படுக்கை அறையுடன் அவருக்கு பிடித்தமான வீடு அமைந்தது. அந்த வீட்டை விலை பேசி சொந்தமாகி வாங்கினார். தற்போது புது வீட்டில் கிரகப்பிரவேசம் நடத்தி குடியேறி விட்டார். இந்த வீட்டின் பக்கத்து வீட்டில்தான் இந்தி நடிகர் இம்தியாஸ் அலி, இந்தி நடிகை பிராச்சி தேசாய் இருவரும் வசிக்கின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *