Search

Actress Samantha Favorite Foods List

samantha

கத்தி படத்தை தொடர்ந்து விக்ரம் ஜோடியாக ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடிக்கிறார் சமந்தா. தெலுங்கு படமொன்றிலும் நடித்து வருகிறார். உடல் எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்படி சமந்தாவுக்கு டைரக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனர். உணவு கட்டுப்பாட்டில் இருக்கும்படியும் வற்புறுத்தி உள்ளனர். சமந்தாவால் அதை கடைபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து சமந்தா டுவிட்டரில் கூறும்போது, ‘சென்னையில் என்னால் உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க முடியவில்லை. சென்னையில் இட்லி, தோசை, பொங்கல் மற்றும் வடைக்கு நான் அடிமை. அவற்றை நிறைய சாப்பிடுவேன். சென்னையில் இருக்கும் தினங்களில் நான் உணவு கட்டுப்பாட்டை மீறி சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன்‘ என்றார்.

சமந்தாவுக்கும், சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இந்த நிலையில் இருவரும் புதுப்பட ஒன்றில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *