Search

Actress Hanshika Motwani latest interview

hanshika-motwani-latest-stills-3

ஹன்சிகா சமீப காலமாக தமிழ் திரை உலகின் நம்பிக்கை நட்சத்திரம் ,,,வானவில் போன்ற ஏழு படங்கள் …வித்தியாசமான கதாபாத்திரங்களில் சோபிக்க

கூடியவர் , எல்லோரிடமும் எளிமையாக பழக கூடியவர் , இயக்குனர்களின் செல்ல பெண் …சக நடிக நடிகையரின் உற்ற தோழி ….உதவும் மனப்பான்மை

மிக்கவர் என பாராட்ட படும் அவருடன் ஒரு மினி பேட்டி இதோ !!!

1. உங்கள் வாழ்வில் உங்களுக்கு உந்துதலாக இருந்த பெண்மணி யார் ??

எனது தாயார்..எனக்காக தன் வாழ்க்கையை அர்பணித்துக்கொண்டு எந்தன் பலமாகவும் உந்துதலாகவும் இருப்பது அவரே.

2. உங்களை கவர்ந்த நடிகை ?

என்னை ஈர்த்தவர்கள் நடிகைகள் மட்டுமல்ல, தனது வாழ்வின் எல்லா அம்சங்களையும் சரியே கையாண்டு , கடின உழைப்பு மற்றும் தியாகங்களை

செய்யும் எல்லா பெண்களும் தான்..அவர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

3. இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பு பற்றிய உங்களது கருத்து..

பாதுகாப்பு என்பது பெண்களின் கையில் தான் உள்ளது..எந்த ஒரு சூழலையும் துணிச்சலுடனும் புத்திசாலிதனமாகவும் கையாள்வது

அவசியம்..அலுவலகங்களில் வேலை தாமதமாக முடியும் நிலையில், பெண்கள் தங்களது பெற்றோருக்கு அதை உடனே தெரிவிப்பது நல்லது..

4.ஏழை எளிய குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை வேண்டியதை செய்யும் உங்களுக்கு இதனை செய்ய

என்ன காரணம் ??

நல்லது செய்ய காரணங்கள் வேண்டாம்..இது எனது பழக்கம்..இவ்வாறான சேவைகளை செய்து வரும் என் தாயார், ஒரு நாள் நீயும் ஏன் இதை செய்ய

கூடாது என கேட்டார்..இந்த கேள்வி என்னை யோசிக்க வைத்தது ..அதன் பிறகு நான் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் நல்வாழ்விற்கு தேவையான

விஷயங்களை செய்து வருகிறேன்..எனக்கு இது மனநிறைவை தருகிறது..

5. தங்களின் கருத்தின்படி கதாநாயகிகளை கையாள்வதிலும் நடத்துவதிலும் தமிழ் திரை துறைக்கும் தெலுங்கு

திரை துறைக்கும் வேறுபாடுகள் உள்ளதா ??

இல்லவே இல்லை..என்னை பொறுத்த வரை எந்த வேறுபாடுகளும் இல்லை..மொழி மாறுமே தவிர ,படப்பிடிப்பு என்ற உணர்வும் , உபசரிப்பும்

ஒன்றுதான்!

6. ஹிந்தி பட வாய்ப்புகள் பற்றி…

ஓய்வில்லாமல் இங்கு படங்கள் செய்து வருகிறேன் . வாய்ப்புக்களும் வந்த வண்ணமே உள்ளன ..ஆனால்.ஹிந்தி படங்களில் நடிக்க நேரம்தான் இல்லை .

7. தமிழ் மற்றும் தெலுங்கில் திரை துறையில் உங்களுடன் நடித்த நடிகர்களில் உங்களது அபிமானவர் யார் ??

என்னோடு நடித்த எல்லோரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடிக்க ஏங்கியிருக்கும் நடிகர்களையும் பிடிக்கும்!

8. எப்படி குறுகிய காலத்தில் உடல் இடையை குறைத்த அந்த ரகசியத்தை சொல்லுங்களேன் ?

Baby fat .குறைந்து விட்டதால் அவ்வாறு தோன்றுகிறேன் .. சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் …உண்மையை சொல்லவேண்டுமென்றால் உண்ணும்

அளவையும் குறைத்துகொண்டு தினமும் உடற்பயிற்சியில் அதிக நேரம் ஈடுபட்டேன்..மற்றும் எனது கடுமையான வேலை பலுவும் என் எடையை

குறைக்க உதவியது

9. எந்த வகையான படங்களை நீங்கள் பார்க்க விரும்புவீர்கள் ?? ஹாலிவுட் மற்றும் உலக சினிமா பார்க்கும்

பழக்கம் உண்டா ??

சமீபகாலமாக எந்த படம் பார்க்கவும் வாய்ப்பில்லை.. நேரமின்மையே பிரதான காரணம் , ஏழு படங்கள் , இரவு பகலென பாராமல் உழைக்கும் உழைப்பு

என்னை எனக்கு மிகவும் பிடித்த சினிமா பார்க்கும் வழக்கத்தை குறைக்க வைத்து விட்டது ..

10. பள்ளி மற்றும் கல்லூரி வாழ்கையை எந்த அளவுக்கு இழக்கரீர்கள் ??

கல்லூரி வாழ்க்கையை இழக்கிறேன் என கூற முடியாது..மாணவ பருவம் என்பது சார்ந்த துறையை தவிர வயது சம்பத்தப்பட்ட விஷயம் கூடத்தான்

நான் நடிகையாக இருப்பது சந்தோஷம் அளிக்கிறது ஆதலால் நான் வருத்தப்படவில்லை..

11. நடிகைகளில் முதல் இடத்தை பிடிப்பதை பற்றி உங்களது கருத்து ??

நம்பர் விளையாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை..அதை பற்றி நான் சிந்திப்பதும் இல்லை..நான் இங்கு நன்கு நடிக்க மட்டுமே வந்துள்ளேன். சிறந்த

நடிகை , பண்பான நடிகை என்ற பெயரே நிரந்தரமானது …அதை சிறப்பாக செய்தாலே போதும் என நினைக்கிறேன்..

12. ‘புகழ்’ பற்றி உங்களது கருத்து ??

புகழ் என்பது மாயை …இன்று நம்முடையது , நாளை யாருடையது யார் அறிவர் …புகழின் உச்சியில் பணிவுதான் நம்மை மக்களிடையே நிரந்தரமாக

நிலைக்க விடும் .. அது போதையும் கூட ,,,அளவுக்கு மிஞ்சினால் நஞ்சே …

13. இந்திய கதாநாயகிகளின் திரை ஆயுட்காலம் குறைவாகவும் ஹாலிவுட் கதாநாயகிகளின் திரை

ஆயுட்காலம் பெரிதாகவும் உள்ளதே…அதை பற்றி…?.

ஆட்சேபிக்கிறேன் ! ரேவதி , குஷ்பூ , ஸ்ரீதேவி ஆகியோர் நிலைக்க வில்லையா ,english vinglish, கஹானி ,போன்ற படங்கள் அந்த கால கட்டத்தை நெருங்க

வைக்கிறது ..அது இயக்குனர்களும் , கதை ஆசிரியர்களும் முயற்சித்தால் மட்டுமே சாத்தியம் .

14. பெண்கள் தினத்தையொட்டி பெண்களுக்கான உங்களது செய்தி..

உறுதியோடு, பக்குவத்தோடு, உங்களின் மேல் நம்பிக்கையோடு இருந்தால் வெற்றி உங்களை தேடி வரும் என்பதில் எந்த சந்தேகமும்

இல்லை…பெற்றோருக்கு முக்கியத்துவமும் மரியாதையும் அளிப்பது மிகவும் அவசியம்.

15. உங்கள் அழகின் ரகசியம்..

என் அழகை பற்றி பேசி பெருமை பட்டுள்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை..எனக்கும் பொருந்தும் ஆடைகள் மட்டும் அணிவதே என்னை அழகாக

காட்டுவதாக நம்புகிறேன்..மேலும் அகத்தின் அழகே முகத்தில் பிரதிபலிக்கும் என்பதை நம்புபவள் நான்..ஆதலால் என்னவோ ரசிகர்களின் கண்களுக்கு

அழகாக தெரிகிறேன்.தெரிவேன்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *