Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Actress Anuradha Son Turns Hero at Pidichiirukka Film

anuradha-son

பிரைட் பியூச்சர் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.ஏ. பிரகாசம் தயாரிக்கும் படம் என்ன பிடிச்சிருக்கா. இதில் நாயகனாக நடிகை அனுராதாவின் மகன் கெவின் அறிமுகமாகிறார். நாயகியாக பிரீத்தி விஜ் அறிமுகமாகிறார். ரவிமரியா, ஜெரால்டு, சின்ராசு, டயானா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், ஸ்ரீதேவி, அணில் ஆகியோரும் நடிக்கின்றனர். நாயகி தாத்தவாக தயாரிப்பாளர் பி.ஏ.பிரகாசம் நடிக்கிறார்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுப்புராஜ் இயக்குகிறார். இவர் மணிவண்ணன், விக்ரமன், ரவிமரியா போன்றோரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். ஸ்ரீவித்யா இசையமைக்கிறார். ராஜா ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறும்போது, புதுமுகங்களை இப்படத்துக்கு தேடியபோது அனுராதா மகன் பொருத்தமாக இருந்தார். இதனால் தேர்வு செய்தோம். உலகம் முழுக்க நம் கலாசாரம் பற்றி பெருமையாக பேசிக் கொண்டு இருக்க நாமோ அந்நிய கலாசாரத்தை பெருமையாக நினைக்கிறோம். அந்நிய தேசத்தில் இருந்து தாத்தாவுடன் நம் நாட்டுக்கு வரும் பேத்திக்கு நமது கலாச்சாரம் மேல் பிடிப்பு வருகிறது. இங்கு சிலம்பாட்டத்தில் வீரனாக திகழும் கெவின் மேல் காதல் கொள்கிறாள். அந்த காதலுக்கு வரும் தடைகளும் அதில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதே கதை.

தேனி, கொடைக்கானல், சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *