பழம்பெரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான முக்தா.வி.சீனிவாசன் ஐயா காலமானார் என்பதை கேட்டு துயரம் அடைந்தேன். கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என்று சகல துறைகளிலும் எங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். 1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலில் இவருடைய தலைமையில்தான் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’ முதல் முறையாக உருவாக்கப்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் நலனுக்காகவும் தமிழ் திரைப்படத்துறை வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்ட முக்தா சீனிவாசன் ஐயா அவர்கள் மறைவுக்கு என் இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். காலத்தால் அழிக்க முடியாத அவரது படைப்புகள் என்றென்றும் அவர் புகழ் பரப்பும்.
– விஷால்