Search

Actor and Actress getting ready to Vote

RajiniKamal

 

பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. நடிகர் – நடிகைகள் வாக்குப் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்ற தயாராகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த், போயஸ்கார்டன் அருகில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நாளை காலை 10 மணிக்கு ஓட்டு போடுகிறார்.

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னையில் பிரசாரத்துக்கு வந்தபோது ரஜினியை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது மோடி, சிறந்த நிர்வாகி, திறமையானவர் அவர் எண்ணம் நிறைவேற வேண்டும் என்று ரஜினி பேட்டி அளித்தார்.

கமலஹாசன் பெங்களூரில் ‘உத்தமவில்லன்’ படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். ஓட்டு போடுவதற்காக இன்று படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை வருகிறார். நாளை காலை 8 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் அவரது அலுவலகத்துக்கு எதிரே உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் ஓட்டு போட்டுவிட்டு உடனடியாக படப்பிடிப்பில் பங்கேற்க பெங்களூர் புறப்பட்டு செல்கிறார்.

நடிகர் விஜய் ‘கத்தி’ படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். அவரது வீடு நீலாங்கரையில் உள்ளது. அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் நாளை காலை ஓட்டு போடுகிறார். ரஜினியை போல் விஜய்யும் நரேந்திரமோடியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா, ‘அஞ்சான்’ படப்பிடிப்புக்காக மும்பையில் முகாமிட்டு உள்ளார். கார்த்தியும் விளம்பர படமொன்றுக்காக மும்பை சென்றுள்ளார். இருவரும் நாளை காலை ஓட்டு போடுவதற்காக விமானம் மூலம் சென்னை வருகின்றனர். தியாகராயநகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் பகல் 12 மணிக்கு ஓட்டு போடுகிறார்கள். அவர்களுடன் நடிகர் சிவகுமார், சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோரும் அதே வாக்கு சாவடியில் ஓட்டு போடுகின்றனர்.

நடிர் அஜீத் திருவான்மியூர் குப்பம் பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் காலை 7 மணிக்கு மனைவி ஷாலினியுடன் சென்று ஓட்டு போடுகிறார்.

விஷால் அண்ணா நகரில் தனது வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் ஓட்டு போடுகிறார். விக்ரம் பெசன்ட் நகரில் ஓட்டு போடுகிறார். ஜெயம் ரவி, பரத், ஆர்யா, நடிகை திரிஷா போன்றோரும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு நாளை ஓட்டு போடுகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *