Search

Action to be taken on Mamooty Trisha and Asin ?

mamooty-asin-trisha

விளம்பர படங்களில் நடிக்கும் மம்முட்டி, திரிஷா, அசின் மீது நடவடிக்கை

நகை கடை, தலையில் தேய்க்கும் எண்ணை வகைகள், சோப்புகள், மனை விற்பனை, வாசனை திரவியங்கள், வாகனங்கள் என விதவிதமான விளம்பரங்களில் நடிக்கின்றனர். இதற்காக கோடி கோடியாக பணம் வாங்குகிறார்கள். ஐந்து நிமிட விளம்பரத்துக்கு இந்தியில் ரூ. 5 கோடி வரை கொடுப்பதாக கூறப்படுகிறது. இதை பார்த்து குறிப்பிட்ட பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்துவதாகவும் விளம்பரங்களில் நடிகர், நடிகைகள் உறுதி அளிப்பது போல் எந்த பயனும் கிடைப்பது இல்லை என்றும் நுகர்வோர் அமைப்புகளில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இப்பிரச்சினையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கவும் போலி விளம்பரங்கள் மற்றும் அதில் நடிப்பவர்கள் மீது என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி முடிவு செய்யவும் துணை கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்க மத்திய விளம்பர படங்கள் கண்காணிப்பு கமிட்டி முடிவு செய்துள்ளது. இந்த குழுவில் மத்திய மாநில அரசு அதிகாரிகளோடு நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர். மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கும் எண்ணைய் விளம்பர படம் ஒன்றை இக்குழுவினர் தீவிர கவனத்தில் எடுத்து விவாதித்துள்ளனர்.

விளம்பர படத்தில் அவர் பேசியது போல் எண்ணையை தேய்த்து தலைமுடி வளரவில்லை என்பது கண்டறியப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பு குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து நாடு முழுவதும் விளம்பர படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஷாருக்கான், தீபிகா படுகோனே, அசின், கரீனாகபூர், திரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கும் விளம்பர படங்களும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *