Search

50 Lakhs Relief Fund to Andhra Storm by Surya Family

actors

ஆந்திர மாநிலம் கடலோர பகுதிகளில் ஹூட் ஹூட் புயல் கரை கடந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக விசாகப்பட்டினம் பகுதி சின்னாபின்னமானது.

புயல் நிவாரண பணிகளை அரசு முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளது. புயல் நிவாரணத்துக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. புயல் நிவாரணத்துக்கு நிதி உதவி அளிப்பதாக தமிழக நடிகர்கள் அறிவித்துள்ளனர்.

நடிகர் சூர்யா குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த தொகை சூர்யா சார்பில் ரூ.25 லட்சமும் நடிகர் கார்த்தி சார்பில் ரூ.12 லட்சமும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார்பில் ரூ.12½ லட்சம் என வழங்கப்படுகிறது. விஷால் ரூ.15 லட்சமும் பிரகாஷ்ராஜ் ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.

தெலுங்கு நடிகர்– நடிகைகள் புயல் நிவாரணத்துக்கு நிதி வழங்கி வருகிறார்கள். தெலுங்கு நடிகர் கிருஷ்ணா ரூ.15 லட்சமும், அவரது மனைவியும் நடிகையுமான விஜயநிர்மலா ரூ.10 லட்சமும், மகன் நடிகர் மகேஷ்பாபு ரூ.25 லட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ரூ.50 லட்சம் வழங்குவதாக அறிவித்து உள்ளார். புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடப் போவதாகவும் தெரிவித்தார்.

ராமாநாயுடு குடும்பத்தினர் ரூ.60 லட்சம் வழங்குவதாக அறிவித்து உள்ளனர். ராம்சரண்தேஜா ரூ.10 லட்சமும், ஜூனியர் என்.டி.ஆர். ரூ.20 லட்சமும், அல்லு அர்ஜுன் ரூ.20 லட்சமும் பிரபாஸ் ரூ.20 லட்சமும், ரவிதேஜா ரூ.10 லட்சமும், அல்லாரிநரேஷ் ரூ.5 லட்சமும், பிரம்மானந்தம் ரூ.3 லட்சமும், நடிகை ராகுல்பிரீத்சிங் ரூ.1 லட்சமும் வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.

தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்து உள்ளது.