Search

1 Lakh stolen from Actress Rakul Preet

rakul-preet

வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு சென்ற நடிகை ராகுல் பிரீத்சிங்கிடம் கொள்ளை நடந்துள்ளது. ராகுல் ப்ரீத் சிங் தமிழில் அருண் விஜய்யுடன் தடையற் தாக்க படத்தில் அறிமுகமானார். என்னமோ ஏதோ படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கி நடிகர்கள், மனோஜ் மஞ்சு ஜோடியாக கரன்ட் தேகா என்ற தெலுங்கு படத்திலும் ராம் ஜோடியாக பண்டக செங்கோ படத்திலும் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக பாங்காக் சென்று இருந்தார். அங்குள்ள ஓட்டலில் தங்கி இருந்து படத்தில் நடித்து வந்தார்.

படப்பிடிப்பு ஓய்வில் ஷாப்பிங் போனார். அவருடன் உதவியாளர்களும் சென்றனர்.

போக்குவரத்து சிக்னலில் ரோட்டை கடப்பதற்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் அவரை நோக்கி வந்தது. அதில் இரண்டு பேர் இருந்தனர். ராகுல் பிரீத்சிங் அருகில் மோட்டார் சைக்கிள் வந்தததும் பின்னால் இருந்தவன் திடீரென ராகுல் பிரீத் சிங் கையில் இருந்த பையை எட்டிப் பிடுங்கினான்.

ராகுல் பிரீத் திருடன் திருடன் என்று அலறினார். ஆனால் பைக்கில் வந்தவர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து பறந்து விட்டனர்.

பையில் ரூ.1லட்சம் ரொக்கம் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் வைத்து இருந்தாராம். அதை பறி கொடுத்த அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இது குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *