Search

1.5Kg Gold Stolen at Anushka’s Film Shooting Spot

anushka hot

நடிகை அனுஷ்கா–நடிகர் ராணா ஆகியோர் நடிக்கும் ‘ராணி ருத்ரமாதேவி’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் புறநகர் பகுதியான ‘நானக்ராம் கூடா’ பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

காக்தியா மன்னர் பற்றிய படம் என்பதால் இதில் நடிக்கும் நடிகர்கள் அதிக அளவு நகைகளை பயன்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து கவரிங் நகைகள், வாடகைக்கு எடுக்கப்பட்டு இருந்தது.

ரவி சுப்பிரமணியம் என்பவரிடம் நகை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருந்தது. நடிகை அனுஷ்கா அணிந்து நடிப்பதற்காக பெங்களூரில் இருந்து 1½ கிலோ எடையுள்ள பழங்கால தங்க நகைகள் வரவழைக்கப்பட்டு இருந்தது.

அனுஷ்கா படப்பிடிப்பு மதியம்தான் நடைபெற இருந்ததால் அந்த நகையும் ரவி சுப்பிரமணியின் பொறுப்பில் கொடுக்கப்பட்டு இருந்தது. மதிய உணவின்போது நகையை மேக்கப் வேன் டிரைவர் இருக்கை பின்புறம் வைத்து விட்டு ரவி சுப்பிரமணியம் சாப்பிட சென்றார்.

15 நிமிடத்தில் திரும்பி வந்து பார்த்தபோது நகைப் பை திறந்து இருந்தது. அதில் இருந்த 1½ கிலோ தங்க நகை மற்றும் கவரிங் நகைகள் மாயமாகி இருந்தது. அதனை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.45 லட்சம் ஆகும்.

படப்பிடிப்பு குழுவில் 150 பேர் இருந்தனர். ‘‘நகையை யார் எடுத்தாலும் திருப்பி தந்து விடுங்கள். போலீசுக்கு புகார் செய்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என எச்சரித்து நிர்வாக தயாரிப்பாளர் ராம்கோபால் படப்பிடிப்பு குழுவினரிடம் விசாரணை நடத்தினார். ஆனால் யாரும் நகையை எடுத்ததை ஒப்புக் கொள்ளவில்லை.

இதையடுத்து ராயதுர்கா போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். சந்தேகத்தின் பேரில் ரவி சுப்பிரமணியம், மேக்கப் வேன் டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *