Search

தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்!

T64-onboard(insta)-malavika-01தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தளபதி விஜயை வைத்து செந்தூரப்பாண்டி, தேவா , ரசிகன் ஆகிய 3 படங்களை தயாரித்துள்ளார் . தற்போது நான்காவது முறையாக XB பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தளபதி விஜயின் 64 வது படத்தை தயாரிக்கிறார் . இந்தப் படத்தை  இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன்  ஒளிப்பதிவு செய்கிறார்.பிலோமின் ராஜ் படத்தொகுப்பினை மேற்கொள்கிறார் .இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு  ஆகியோர் நடிக்கின்றனர் .தற்போது நடிகை மாளவிகா மோகனன் தளபதி 64 படத்தில் இணைந்து நடிக்கிறார் . இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் படமான ‘பியாண்ட் தி கிலவுட்ஸ்’ மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மெகாஹிட் படமான பேட்ட ஆகிய படங்களில் நடித்துள்ளார் . மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது !




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *