Search

தளபதி விஜயின் “பிகில்” அக்டோபர் 25 முதல் திரைக்கு வருகிறது !

BIGIL POSTERதளபதி விஜயின் “பிகில்” அக்டோபர் 25 முதல் திரைக்கு வருகிறது !

தளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் “பிகில் ” படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர் ..

இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரித்துள்ளனர் . கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி .

வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா இந்தப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் .

மேலும் விவேக் , கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி , ஆனந்த் ராஜ் , தேவதர்ஷினி , யோகிபாபு ,மனோபாலா ,LM விஜயன் , இந்துஜா , அமிர்தா ஐயர் , ரெப்பா மோனிகா ஜான் , வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர் .

இப்படத்தின் பாடல்களின் நல்ல வரவேற்ப்பிற்கு பிறகு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி தமிழ் சினிமாவில் புதிய சாதனையை படைத்தது .

தற்போது இத்திரைப்படம் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் திரைக்கு வருகிறது என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் .

தொழில்நுட்ப கலைஞர் விவரம்:

தயாரிப்பு – கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் (ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்)
கதை, திரைக்கதை வசனம் இயக்கம் – அட்லி
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி
ஒளிப்பதிவு – G.K.விஷ்ணு
படத்தொகுப்பு – ரூபண் L.ஆண்டனி
கலை – T.முத்துராஜ்
சண்டைப்பயிற்சி – அனல் அரசு
பாடல்கள் – விவேக்
நிர்வாக தயாரிப்பு – S.M.வெங்கட் மாணிக்கம்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *