Search

தமிழ் மொழியில் வெளியாகும் எஸ்.எஸ் ராஜ மௌலியின் “விஜயன் “

yamadonga (6)

2007 ஆண்டு தெலுங்கில் வெளியான ” யமதொங்கா ” எனும் பிரமாண்ட திரைப்படத்தை எஸ்.எஸ் ராஜ மௌலி இயக்கியிருந்தார் . ஜுனியர் என்.டி.ஆர் கதாநாயகனக நடித்திருந்த இப்படத்தில் இவருடன் குஷ்பு , ப்ரியாமணி , மம்தா மோகன்தாஸ் ,ரம்பா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். கதை விஜயேந்திர பிரசாத் , மரகதமணி இசையமைத்திருந்தார் . கே.கே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார் . இவர்கள் அனைவரும் நான் ஈ , பாகுபலி , பாகுபலி2 ஆகிய படங்களில் பணியாற்றிய வெற்றிக்கூட்டணி .

பூலோகம் மற்றும் எமலோகத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான ‘யமதொங்கா’ திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் மொழியில் தற்போது டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது . ARK ராஜராஜா தமிழில் வசனங்களை எழுதியுள்ளார் .

இயக்குனர் எஸ்.எஸ் ராஜ மௌலி இதுவரைக்கும் 11 படங்கள் இயக்கியுள்ளார் .5 படங்கள் ரீமேக்காகவும் , 2 படங்கள் மொழி மாற்றம் செய்தும் , 3 படங்கள் எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்திலும் வெளியானது . தமிழில் வெளிவராத ஒரே படம் யமதொங்கா. தற்பொழுது மொழிமாற்றம் செய்து தமிழில் ஓம் ஸ்ரீ சப்த கன்னியம்மன் கிரியேஷன் தயாரித்து , ஓம் ஸ்ரீ முனீஸ்வரர் மூவிஸ் வெளியிட உள்ளது . M .ஜெய கீர்த்தி மற்றும் ரேவதி மேகவண்ணன் தயாரித்துள்ளனர் . நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது .




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *