Search

திரைப்படமாக்கப்படும் சர்ச்சைக்குரிய ‘அனிதா பத்மா பிருந்தா’ நாவல்!

al-surya_1சில உண்மைகள் கலந்த நாவலை நாம் படிக்கும் போது, அதில் இருக்கும் சுவாரஸ்யம் எதிலும் அடங்காது. அந்த வகையில் உருவான, ’அனிதா பத்மா பிருந்தா’ என்ற நாவல் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் பல கசப்பான மறைக்கப்பட்ட உண்மைகளையும், அதிர்ச்சியூட்டும் பலான மேட்டர்களை பற்றியும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த நாவலை, சினிமாத்துறையோடு மிக நெருக்கமான தொடர்பில் இருக்கும் ஏ.எல்.சூர்யா என்ற இளைஞர் எழுதியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த நாவல் தற்போது திரைப்படமாகிறது. இதை எழுதிய ஏ.எல்.சூர்யாவே இப்படத்தை எழுதி இயக்குவதோடு, இசையமைத்து ஹீரோவாக நடித்து தயாரிக்கவும் செய்கிறார்.

சினிமாத்துறையோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கும் ஏ.எல்.சூர்யா, தான் சந்தித்து பழகிய பலரிடமும் தனக்கு உண்டான மறக்க முடியாத அனுபவங்களையும், இனிய நினைவுகளையும், கசப்பான உண்மைகளையும், மனதில் ஆழமாக பதிந்த சம்பவங்களையும், ஆற முடியாத காயங்களையும் நாவலாக எழுதியவர், அதை சினிமாவுக்கான பரபரப்பான திரைக்கதையாகவும் எழுதி முடித்திருப்பவர், தற்போது படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இப்படத்திற்காக முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களை ஒப்பந்தம் செய்திருப்பவர், படத்தில் வரும் 4 முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

ac3b500a75eb99e8dd1b9969dc61973bசினிமாவில் பிரபலமாக இருக்கும் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகள் என அனைவரது நிஜ வாழ்க்கையில் நடந்த இனிப்பான மற்றும் கசப்பான சம்பவங்கள் படத்தில் நிறைந்திருக்கும் என்பதால், இப்படத்தின் மீது கோலிவுட்டின் பிரபலங்களின் பார்வை பட ஆரம்பித்துவிட்டது. மேலும், இப்படம் வெளியானால் யாரை பற்றி, எந்த மாதிரியான உண்மை தெரிய வருமோ!, என்று தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் அலற தொடங்கிவிட்டார்கள்.

இந்த திரைக்கதை படமாக்கப்பட்டால் அது இந்திய சினிமா வரையிலும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி பாசிட்டிவ் என்ற தனது யூடியூப் சேனல் மூலம் இவர் வெளியிட்டிருக்கும் சுமார் 200 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் பல லட்சங்களாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *