Search

அதிரடி வசூல் வேட்டை… முடிவு கட்டுவது யார்.??

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தில் (DIC) பொது மேலாளராக பணிபுரியும் கண்ணன் என்பவரும் அதில் மேலாளராக பணிபுரியும் சந்திரசேகர் என்பவரும் மறுபடியும் வசூல் வேட்டையில் இறங்கி உள்ளதாக நமக்கு தகவல் தருகின்றனர் பாதிக்கபட்ட தொழில் முனைவோர்கள்.

கண்ணன் மற்றும் சந்திரசேகர் கூட்டணி ஏற்கனவே இரண்டு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் அதை இருவரும் பங்கு பிரித்து வெவ்வேறு இடங்களில் பதுக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது தற்போது இந்த இருவர் கூட்டணி மறுபடியும் தொழில் முனைவோர்களிடத்தில் 20% முதல் 30% வரை கேட்பதாக கூறப்படுகிறது.

தாங்கள் கேட்ட பணத்தை கொடுக்காத தொழில் முனைவோர்களின் மானிய கோரிக்கையை நிராகரித்து விடுவதாக மிரட்டுவதாகவும் அறியப்படுகிறது.

இவர்கள் இருவரும் மீதும் ஏற்கனவே நிறைய புகார்கள் மேலிடத்திற்கு சென்று இருந்தாலும் அதன் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்,அதனால் இந்த கூட்டணி தைரியமாக மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பத்திருக்கின்றது.

இவர்கள் இருவருக்கும் சென்னை கிண்டியில் அமைந்துள்ள Industry Department-ல் Additional Director ஆக பணிபுரியும் ஒருவர் ஆசி இருப்பதாகவும்,அவர் ஆசியினாலேயே இவர்கள் இருவரும் தொழில் துறையினரை மிரட்டி வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையெல்லாம் அறிந்தும் commissioner நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது ஏன் என்று தெரியாமல் ஒரே மர்மமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவேர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா?Commissioner நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *