பூ ராமு,இளங்கோ, அஞ்சலி நாயர்,அஜய்நடராஜ்,மைம்கோபி,ஐந்து கோவிலான், செந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
தயாரிப்பு : பி – ஸ்டார் புரொடக்ஷன்ஸ்
இசை : ஜோஸ் ஃபிராங்க்ளின்
ஒளிப்பதிவு : வினோத் ரத்தினசாமி
பாடல்கள் : கவிப்பேரரசு வைரமுத்து
படத்தொகுப்பு : மு.காசிவிஸ்வநாதன்
கலை : விஜய் தென்னரசு
சண்டை பயிற்சி : ராம்போ விமல்
நடனம் : தினா, சதீஷ்போஸ்
மக்கள் தொடர்பு : மணவை புவன்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – செல்வகண்ணன்
படம் பற்றி இயக்குனர் செல்வகண்ணன் கூறியதாவது…
எல்லோரோட வாழ்க்கைக்கு பின்னாடியும் யாரோ ஒருத்தரோட தியாகம் இருக்கும் என்னோட இந்த நெடுநல்வாடை படத்திற்கு பிறகு என் நண்பர்களின் தியாகம் இருக்கு. அந்த தியாகம் தான் இந்த படத்தின் கதை.
இந்த படம் பார்க்கிறவர்கள் இந்த மாறி ஒரு வாழ்கையை வாழ்ந்திருப்பீர்கள் அல்லது இப்படி ஒரு வாழ்கையை வாழ முடியாமல் போய்விட்டதே என்று ஏங்கி இருப்பீர்கள்.
இது 75 சதவீதம் உண்மை கதையை மையமாக வைத்து உருவாக்கபட்ட படம். பூராமை நான் ஒவ்வொரு காட்சியிலும் என் தாத்தாவைத்தான் பார்த்தேன்.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம் மார்ச் 15 அன்று ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் P.மதன் இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவி புரிந்து வருகிறார் என்றார் இயக்குனர் செல்வகண்ணன்.